Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2017

டிரம்பை நான் காதலிக்கவில்லை: பிரான்ஸ் அதிபர் மனைவி மறுப்பு


பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசியின் மனைவி கர்லா புரூனியுடனான காதலை டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கர்லா முற்றிலுமாக இதனை மறுத்துள்ளார்.
கர்லா புரூனியின் வயது 49, இவர் முன்னாள் மொடல் அழகியாகவும், பிரபல பாடகியாகவும் திகழ்ந்தவர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் இவர் காதல் வயப்பட்டிருப்பதாகவும், அவரது 2-வது மனைவி மார்லா மாப்பில்ஸ் விவாகரத்துக்கு இவர் காரணமாக இருந்ததாகவும் தேர்தல் பிரசாரத்தின் போது கூறப்பட்டது.
அப்போது அதை மறுத்து வந்த டிரம்ப் தற்போது அளித்த பேட்டியில் உண்மை என ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த புரூனி “டிரம்பை நான் ஒரு போதும் காதலித்தது இல்லை”என கூறியுள்ளார்.
2008-ம் ஆண்டு பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசியை கர்லாபுரூனி திருமணம் செய்தார். அவர்களுக்கு 5 வயதில் குயிலியா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
முதல் கணவர் பெயர் ரபேல் என்தோவன். இவர் பிரெஞ்ச் தத்துவஞானி ஆவார். இவருக்கு பிறந்த அயுரேலியன் என்ற 15 வயது மகன் இருக்கிறான். இவர் மொடலிங் செய்த போது நிர்வாணமாக ‘போஸ்’ கொடுத்து இருந்தார்.
இவர் சர்கோசியை திருமணம் செய்த போது அந்த புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.