Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 5, 2017

இந்தியா- பாக். மேட்சை விஐபி கேலரியில் அமர்ந்து ரசித்த தேடப்படும் குற்றவாளி விஜய்மல்லையா


பர்மிங்காம்: இந்தியாவால் தேடப்படும் விஜய்மல்லையா பர்மிங்காமில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ஐசிசி சாம்பியன் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்து இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ9,000 கோடி கடனை வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இந்தியாவைப் பற்றியும் இந்திய ஊடகங்களையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் விஜய்மல்லையா.
இந்நிலையில் பர்மிங்காமில் இன்று நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் போட்டி பார்க்க விஜய் மல்லையாவும் வந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் விஐபி கேலரியில் விஜய் மல்லையா அமர்ந்து போட்டியை பார்த்திருப்பது புதிய சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.