Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2017

ஓ.பி.எஸ்-ஐ முற்றுகையிட்ட மக்கள்!


தேனி மாவட்டம் பெரிய குளத்தில் அரசு விரைவுப் பேருந்து உரிய நேரத்தில் வராததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பயணிகளை சமாதானப்படுத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து சென்னைக்கு இரவு 7 மணிக்கு அரசு விரைவுப் பேருந்து செல்வது வழக்கம். ஆனால் அந்த பேருந்து நேற்று இரவு 11 மணி வரையிலும் வராததால் இணையத்தளம் மூலம் முன் பதிவு செய்திருந்த 40 பயணிகள் கடும் அவதியடைந்தனர். இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் உரிய பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் தேனி திண்டுக்கல் சாலையில் சாலைமறியலில் ஈடுபட முற்பட்டனர். அப்போது  அவ்வழியாக  முன்னாள் முதல்வர் ஒ,பன்னீர்செல்வம் காரில் வந்தார். அப்போது அவரை முற்றுகையிட்ட பயணிகள் தங்கள் அவதியைத் தெரிவித்தனர்.  இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்திய ஓ.பன்னீர்செல்வம், தேனி போக்குவரத்து பணிமனையில் இருந்து பேருந்து வர ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.  இதனைத் தொடர்ந்து  சாலைமறியலை அவர்கள் கைவிட்டனர். பின்னர் இரவு 11.30 மணி அளவில் பேருந்து வந்து சென்னை செல்லும் பயணிகளை ஏற்றிச் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.