June 15, 2017
'தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை' - திட்ட அதிகாரி திட்டவட்டம்!
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை என அதன் திட்ட அதிகாரி விவேக் தாடர் தெரிவித்துள்ளார். 'தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணி இன்னும் கைவிடப்படவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி குறித்து தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம். தேசிய பசுமை தீர்ப்பாய தடை உத்தரவை அடுத்து சுற்றுச்சூழல் அனுமதிக்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளோம். ஆந்திரா உட்பட மாநிலங்கள் நியூட்ரினோ திட்டத்தை தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன', என நியூட்ரினோ திட்ட அதிகாரி விவேக் தாடர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேனியில் அமைய இருந்த நியூட்ரினோ ஆய்வக திட்டம் கைவிடப்பட்டு, ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டம் கொத்தாபெல்லாம் என்ற இடத்தில் நியூட்ரினோ ஆய்வகத்தை மாற்றி அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியாகி இருந்தது. தமிழகத்தில் தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமம் போடி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க திட்டமிடப்பட்டு அங்கு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இத்திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. அதன் வழக்கின் அடிப்படையிலேயே நியூட்ரினோ திட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
'தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கைவிடப்படவில்லை' - திட்ட அதிகாரி திட்டவட்டம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 15, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.