Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2017

மக்கள் விரும்பாததால் பேச்சுவார்த்தை குழு கலைப்பு!'- பன்னீர்செல்வம் தகவல்


பிரிந்து செயல்பட்டு வரும் அ.தி.மு.க.வின் இரு அணிகளை இணைப்பதற்கான அ.தி.மு.க  புரட்சித்தலைவி அம்மா அணியின் பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

பன்னீச்செல்வம்

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் முதலில் சசிகலா தலைமையிலும் பின்னர், தினகரன் தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வந்தது. இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி, 'சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.விலிருந்து விலக்கி வைப்போம்' என்று கூறினார். இதனால் தினகரன் தலைமையில் இருந்த இரண்டாவது அணிக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். இதையடுத்து பிரிந்து கிடந்த இரண்டு அணிகள் இணைப்பதற்காக இரு அணிகளிலும் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது.

ஓ.பி.எஸ் அணியினர், 'சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து அதிகாரபூர்வமாக விலக்கிவைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இணைப்பு குறித்து பேசுவோம்' என்று கூறினர். ஆனால், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கபடாததை அடுத்து இரு அணிகளின் இணைப்பு இழுபறியான நிலையில் இருந்தது. இந்நிலையில்தான் பன்னீர்செல்வம் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.