June 19, 2017
பெண்கள் மட்டும் இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
பெண்கள் சிறு வயதில் சுட்டியாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வாழ்க்கையின் ஒருசில முக்கிய விடயங்களை பற்றி தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம்.
அந்த வகையில், பெண்கள் ஆடை அணிவது முதல் உடல் ஆரோக்கியம் வரை வாழ்க்கை முறைக்கு தேவைப்படும் சில முக்கியமான விடயங்கள் இதோ,
பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்
•பெண்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு விழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு சூரியன் உதிக்கும் முன்பே சமையல் மற்றும் வீட்டு வேலைகளை முடித்து விடுவது மிகவும் நல்லது.
•பெண்கள் எப்போதும் பொருத்தமான உள்ளாடைகள் அணிவது மிகவும் அவசியம். இறுக்கமான உள்ளாடைகளை அணியக் கூடாது. ஏனெனில் அது பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
•புதிதாக தொழில் தொடங்குவதில் பெண்களுக்கு அதிக ஆர்வம் இருந்தால், அதற்கு அவர்கள் முக்கியமாக தொழில் நேர்த்தியை கற்றுக் கொள்வதுடன், நட்பான அணுகுமுறை அவர்கள் முன்னேற்றத்தின் படிக்கல் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
•பெண்களில் சிலர் ஹோட்டலில் சுவை நன்றாக உள்ளது என்று அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவது தவறு. அதற்கு பதிலாக சமையல் குறிப்புகளை படித்து, அதன் படி, வீட்டிலே ஆரோக்கியமாகவும், சுவையாகவும் சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
•வீட்டில் உள்ள பொருள்கள் சிதறிக் கிடந்தால், அதற்கு டென்ஷன் அடையாமல், இனிமையான இசையை கேட்டுக் கொண்டு சிதறிக் கிடக்கும் பொருள்களை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட கற்றுக் கொள்ள வேண்டும்.
•தினமும் வீட்டை பெருக்கும் போது, அந்த குப்பைகளை ஒரு தொட்டியில் போட்டு சேகரித்த பின் வெளியில் போடும் நல்ல பழக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
•பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, திருடர்கள் தாக்கும் நேர்ந்தால், அதை சமாளிக்க காரத்தே போன்ற தற்பாதுகாப்பு கலைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
•பெண்கள் பணத்தை சம்பாதிப்பதை விட, அதை சேமிப்பதில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். தொழில் மற்றும் படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு செல்ல நேரிட்டால், மன ரீதியான தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்
பெண்கள் மட்டும் இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 19, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.