Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2017

'விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யுங்கள்!'- மத்திய அரசுக்கு மம்தா கோரிக்கை






மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'இந்திய அரசு, விவசாயக் கடன் மொத்தத்தையும் தள்ளுபடிசெய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் உள்ள விவசாயக் கடன் அனைத்தையும் தள்ளுபடிசெய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளால் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சில நாள்களுக்கு முன்னர், 'விவசாயக் கடன்களை ரத்துசெய்ய வேண்டும் என்று விரும்பும் மாநில அரசுகள், அவர்களின் நிதியிலிருந்தே அதைச் செய்ய வேண்டும்' என்று கறாராகக் கூறிவிட்டார்.
இதையொட்டிதான் மம்தா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'இந்திய அரசு, நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகள் கடனையும் ரத்துசெய்ய வேண்டும். விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது, அரசு அமைதியாக இருக்கக்கூடாது. தற்போது ஆட்சியில் இருக்கும் ஆளுங்கட்சி, 'விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடிசெய்யப்படும்' என்று உறுதி கொடுத்திருந்தனர். சொன்னபடி அதை நடைமுறைப்படுத்த வேண்டும். மாநிலங்கள் மீது அதைச் செய்யும்படி பணிக்கக்கூடாது.' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.