Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2017

தமிழகத்தில் எய்ம்ஸ்: பொன்முடி கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி!


'தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றுவருகிறது. சட்டமன்றத்தில் தி.மு.க உறுப்பினர் பொன்முடி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதுகுறித்து கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, 'எய்ம்ஸ் மருத்துவமனை அமைய சாதகமாக இருந்ததால், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியை மத்திய அரசிடம் பரிந்துரைத்தோம். ஆனால், தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. செங்கிப்பட்டியை மத்தியக் குழு நிராகரித்துவிட்டது. தஞ்சாவூர் செங்கிப்பட்டி, மதுரை தோப்பூர், ஈரோடு பெருந்துறை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை பால்பண்ணை ஆகிய ஐந்து இடங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைசெய்தோம். ஐந்து இடங்களில் ஏதாவது ஒன்றில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். தமிழகத்தில் ஏதாவது ஓர் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.