June 27, 2017
திண்டுக்கல் லியோனி அட்டாக் : இரட்டை சின்னத்தை பறித்தவர்களுக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு !
இரட்டை இலையை பறித்த கட்சிக்கே ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது என்று திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஈரோட்டில் கூறியுள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பஸ் நிலையத்தில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார்.தன் கட்சியின் தலைவியின் படத்தை கூட ரகசியமாக தான் போட வேண்டி உள்ளது. சசிகலாவின் படத்தை யார் எங்கு பார்த்தாலும் கிழித்து எறிகின்றனர். ஜெயலலிதா பல சொத்துகள் சம்பாதித்தார். ஆனால் அதெல்லாம் அனாதையாக கிடக்கின்றன.
தன் கட்சியின் தலைவியின் படத்தை கூட ரகசியமாக தான் போட வேண்டி உள்ளது. சசிகலாவின் படத்தை யார் எங்கு பார்த்தாலும் கிழித்து எறிகின்றனர். ஜெயலலிதா பல சொத்துகள் சம்பாதித்தார். ஆனால் அதெல்லாம் அனாதையாக கிடக்கின்றன.
கலைஞர் தான் குடியிருந்த வீட்டை கூட மருத்துவமனைக்காக எழுதி கொடுத்துள்ளார். குளித்தலையில் தொடங்கி திருவாரூர் வரை 13 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக சிறந்த தலைவராக உள்ளார்.
ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியவர் கலைஞர். தேசிய கட்சிகளுக்கு கூட சின்னங்கள் மாறியுள்ளன. ஆனால் ஒரே சின்னத்தில், உதயசூரியன் சின்னத்தில், கலைஞர் வெற்றி பெற்றுள்ளார். யாரும் படைக்காத சாதனை.
தங்களின் கட்சி சின்னத்தையே பறித்த கட்சிக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு கொடுத்துள்ளது அதிமுக. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் பினாமியாக உள்ளார். வரும் காலத்தில் தி.மு.க.விற்கு ஆதரவு கொடுத்து தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும்." என்று தெரிவித்தார்.
திண்டுக்கல் லியோனி அட்டாக் : இரட்டை சின்னத்தை பறித்தவர்களுக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு !
Reviewed by Admin
on
June 27, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.