ஐநா சபை மனித உரிமை 35 வது கவுன்சில் கூட்டத்தில் opening statement முடிந்தவுடன் , அரசியால் சாரா அமைப்புகள் சார்பில் விவாதம் நடக்கும்.
இதில் இந்தியா சார்பில் இரண்டு முக்கிய விஷயங்கள் வைக்கப்பட்டது. அதில் ஒன்று காஷ்மீரில் நடக்கும் கொடூர தாக்குதல்கள் குறித்தது பேசப்பட்டது.
அடுத்து தமிழகம் சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தியபிரச்சனையில் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்தும் பேசப்பட்டது.
இதில் ஒரு நிமிட அவகாசத்தில் திருமுருகனுக்கு ஆதரவாக மூன்று உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை எழுப்பினர்.
இதற்கு இந்தியா சார்பில் பதில் அளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சாதாரண போராட்டத்தில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் மோசமான நிலை சென்னையில் நடப்பது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மானத்தை கப்பலேற்றியுள்ளது.
மத்திய அரசு சார்பிலும், தமிழக அரசு மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் தரப்பிலும் பதிலளிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.