Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2017

அதிமுக அலுவலகத்திற்கு வருகிறார் தினகரன்.. இடைஞ்சல் செய்தால்.. ஆதரவாளர்கள் எச்சரிக்கை


அதிமுக அலுவலகத்திற்கு வருகிறார் தினகரன்.. இடைஞ்சல் செய்தால்.. ஆதரவாளர்கள் எச்சரிக்கை

சென்னை: அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சிப் பணிகளை கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து தொடங்கப் போகிறாராம். யாரும் இடையூறு செய்யக் கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் முதல்வர் தரப்பை எச்சரித்துள்ளனர் அதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த டிடிவி.தினகரன் அதிமுகவின் கோஷ்டிகள் இணைப்புக்காக கட்சியில் இருந்து தான் ஒதுங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். இதனையடுத்து இரட்டை இலை சின்ன வழக்கில் சிறை சென்று வெளிவந்த நிலையில் தான் கட்சியில் நீடிப்பதாக தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து சிறையில் இருந்த காலகட்டத்தில் கட்சியில் நடந்த செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப் போவதாக தெரிவித்தார். தனது சித்தி சசிகலா அட்வைஸ்படி 2 மாதம் பொறுத்திருந்து இரண்டு கோஷ்டிகளின் செயல்பாடுகளை பார்க்கப் போவதாகவும். எனினும் கட்சிப் பணியின் தொடர்ந்து ஈடுபடப் போவதாகவும் கூறினார்.

திடீர் பிடிவாதம் இந்நிலையில் முதல்வர் எடப்பாடி கோஷ்டி தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது நீக்கப்பட்டது தான். அவர் அந்த அறிவிப்போடு நின்று கொள்ளட்டும் கட்சியையும் ஆட்சியையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கொக்கரித்தன.

எம்எல்ஏக்கள் ஆதரவு இதனால் எடப்பாடி கோஷ்டி, தினகரன் கோஷ்டிக்கு இடையே கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்றது. இதனிடையே எடப்பாடி அரசில் உள்ள எம்எல்ஏக்கள் பலர் தினகரனை சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். சுமார் 30க்கும் மேற்பட்ட எமஎல்ஏக்கள் தினகரனை சந்தித்து சென்றுள்ளனர்.

சின்னத்துக்கு போட்டி அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையோடு முடிகிறது. சின்னத்திற்கு சொந்தம் கொண்டாடி அதிமுகவின் எடப்பாடி கோஷ்டியும், ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியும் லட்சக்கணக்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளன. இந்த அக்கப்போர்களுக்கு மத்தியில் ஜெ.தீபாவும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

அடுத்த அதிரடி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கும் அதிமுகவில், அடுத்தகட்டமாக டிடிவி. தினகரன் விரைவில் கட்சி அலுவலகம் சென்று கட்சிப் பணிகளை தொடங்க உள்ளாராம். அந்த சமயத்தில் இடையூறு செய்யக் கூடாது என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது

சந்திப்பு திட்டம் சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்ததும் முதல்வர் எடப்பாடியை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எம்எல்ஏ தங்கத் தமிழ்செல்வன் தலைமையிலான தினகரன் ஆதரவு கோஷ்டி தலைமைச் செயலகத்தில் சந்தித்து தங்களது திட்டத்தை தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.