June 27, 2017
மும்பையில் தொடரும் கனமழை : முக்கிய சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் மக்கள் கடும் பாதிப்பு !
மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால் தாழ்வான இடங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. கடந்த வார இறுதியில் இருந்து மும்பை, தானே, நவி மும்பை போன்ற இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வர்த்தக நகரமான மும்பையில் கொட்டி வரும் கனமழையால் பிரதான சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. தாழ்வான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சயன், கிங் சர்க்கிள், ஹிந் மாதா, தாதர் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. மழை நீரால் உருவான வெள்ளம் பல பகுதிகளில் வடியாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே கல்வா உள்ளிட்ட இடங்களில் ரயில்வே இருப்பு பாதையை சூழந்த மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மின்சார ரயில்கள் இயக்கப்பட்டாலும் வேகமாக செல்வதை தவிர்க்குமாறு ரயில் டிரைவர்களுக்கு அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையின் முக்கிய பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
மும்பையில் தொடரும் கனமழை : முக்கிய சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் மக்கள் கடும் பாதிப்பு !
Reviewed by Admin
on
June 27, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.