June 12, 2017
போயஸ் கார்டனில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப் பதிவு!
போயஸ் கார்டனில், நேற்று செய்தியாளர்கள் இரண்டு பேர் தாக்கப்பட்டது தொடர்பாக, தனியார் பாதுகாவலர்கள் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளது காவல்துறை.
நேற்று காலை, திடீரென ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்குச் சென்றார், அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா. தினகரன் ஆதரவாளர்கள் தங்களை உள்ளே விட மறுக்கின்றனர் என தீபா ஆதரவாளர்கள் புகார் கூறினர். தீபா, தன் சகோதரர் தீபக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போயஸ் கார்டன் இல்லத்தின் அருகே இருந்த பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில், பாதுகாவலர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்தப் புகாரில்... தீபக் அழைத்ததன் பேரில்தான் தீபா போயஸ்கார்டன் வந்ததாக செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தங்கள் கேமராவைப் பறித்து, மைக்கை உடைத்ததாக தனியார் பாதுகாவலர்கள் மீது செய்தியாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே, போயஸ் கார்டனின் தனியார் பாதுகாவலர் தங்கையன் என்பவர், செய்தியாளர்கள் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள், காவலர்களை அவதூறாகப் பேசி மிரட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கையனின் புகாரின் பேரில், செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மீது நான்கு பிரிவில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
போயஸ் கார்டனில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப் பதிவு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 12, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.