Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2017

ஓபிஎஸ் அணி முடிந்துபோன முதியோர் இல்லம்... சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!


சென்னை: ஓபிஎஸ் அணி முடிந்துபோன முதியோர் இல்லம் என தினகரனின் தீவிர ஆதரவாளரும் கர்நாடக மாநில அதிமுக. அம்மா அணி செயலாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணி கர்நாடக மாநில செயலாளரான புகழேந்தி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டார். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்த புகழேந்தி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பெரும் பிரபலமாகிவிட்டார்.
அடிக்கடி செய்தியாளர்களை சந்திப்பது, ஓபிஎஸ் அணியை வாருவது, சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளர் என காட்டிக்கொள்வது என புகழேந்தி அமைச்சர்களுக்கு ஈடாக பிரபலமாகிவிட்டார்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணி குறித்து புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஓபிஎஸ் அணியினர் நினைவாற்றலை இழந்து உள்ளதாக அவர் சீண்டினார்.
இனி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் புகழேந்தி கூறினார். சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என்று சவால் விட்ட ஓ.பி.எஸ். இதுவரை அதைச் செய்யவில்லை என்றும் புகழேந்தி கூறினார்.
அவர் அ.தி.மு.க.வை விட்டு பிரிந்து சென்றபோது இருந்த 12 எம்.எல்.ஏ.க்களை தவிர வேறு யாரும் அவருடன் செல்லவில்லை என்றும் புகழேந்தி கூறினார்.தொண்டர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இல்லை என்பதால் உளறிகொட்டி வருகிறார் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சரமாரியாக விளாசினார்.
மேலும் ஓபிஎஸ் அணி என்பது முடிந்துபோன முதியோர் இல்லம் என அவர் சாடினார். முதியோர்களை இழிவுப்படுத்தும் வகையில் புகழேந்தி பேசியிருப்பது சரச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.