June 1, 2017
எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு வினாத்தாள் ஆன்லைனில் கசிந்தது
நாடு முழுவதும் ஆன்லைனில் நடந்த எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததாக வியாபம் ஊழலை வெளிப்படுத்திய ஆனந்த்ராய் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். மத்தியப் பிரதேசத்தின் மாநில அரசு பணியிடங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு நடத்தும் வியாபம் அமைப்பில் பெரும் ஊழல் நடந்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி
ய இந்த ஊழலை முதலில் வெளிக்கொண்டு வந்தவர் ஆனந்த் ராய். இவர், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரிலுள்ள அரசு மருத்துவமனையின் மருத்துவராகப் பணியாற்றியவர். தற்போது இவர், எய்ம்ஸ் கல்லூரி எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்திருப்பதாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ஆனந்த் ராய் தனது டிவிட்டர் பதிவில், கடந்த 28ம் தேதி நாடு முழுவதும் நடந்த எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு வினாத்தாள் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த
நுழைவுத்தேர்வின்போது, உத்தரப்பிரேதச மாநிலம் லக்னோவில் உள்ள சக்சேனா கல்லூரியில் இருந்து வினாத்தாள் கசிந்ததாகவும் அது தொடர்பான கேள்வித்தாள் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘ஒரே நாளில் இரண்டு ஷிப்ட்டாக நுழைவுத்தேர்வு நடந்தது. தேர்வு நடக்கும் போதே வினாத்தாள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக பிரதமரும், எய்ம்ஸ் இயக்குனரும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றார். மேலும் எய்ம்ஸ் கல்லூரி சீட்கள் பெரும் தொகைக்கு
விற்கப்படுவதாகவும், அதுபோன்ற மாபியா கும்பல்களால், நேர்மையாக கஷ்டப்பட்டு படித்த திறமையான மாணவர்கள் பலர் பாதிக்கப்படுவதாக ஆனந்த்ராய் குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு பதிலளித்த எய்ம்ஸ் நிர்வாகம், ‘வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து ஏற்கனவே டெல்லி போலீசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது’ என கூறி உள்ளது.
எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு வினாத்தாள் ஆன்லைனில் கசிந்தது
Reviewed by மறத்தமிழன்
on
June 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.