Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2017

மாட்டிறைச்சிக்கு தடையா.. ராஜினாமா செய்த மேகாலய பாஜக தலைவர்... உன் கட்சியே தேவையில்லை !


பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

அதே போன்று மேகாலய மாநிலத்தில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதுவும் அம்மாநிலத்தின் கேரோ ஹில்ஸ் மாவட்டத்தின் பாஜக தலைவரான பெர்னார்ட் மராக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தினார்.

மாட்டிறைச்சி தடை குறித்து, கேரோ மலைப்பகுதி மாநிலத்தின் தன்னாட்சிப் பெற்ற பகுதிகளில் ஒன்றாகும். மாநிலத்தின் பல பாஜக தலைவர்கள் மாட்டிறைச்சி உண்பவர்களே என்று பெர்னார்ட் துணிச்சாலாக கூறினார்.

மேலும், மலைப்பகுதிகளில் அமலில் இருக்கும் அரசியலமைப்பு பிரிவுகள், அதன் வரலாற்று பின்னணி ஆகியவற்றை மாநில பாஜக தலைவர்கள் அறிவார்கள், மாட்டிறைச்சி தடை என்பதை இங்கே திணிக்கக் கூடாது என்று பெர்னார்ட் உறுதியாகக் கூறினார்.

மாட்டிறைச்சி எங்களது கலாச்சாரம். அதனை விட்டுவிட்டு எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று தனது பேஸ்புக்கிலும் துணிச்சலாக பெர்னார்ட் பதிவிட்டார். மேலும், பாஜகவின் கொள்கையை மக்கள் மீது திணிக்கப்படுகிறது என்றும் இன்னொரு பதிவில் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று அவர் மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெர்னார்ட் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்வதாகக் கூறி கடிதம் ஒன்றை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளார். மேகாலய மாநிலத்தின் முக்கிய தலைவராக இருந்து பாஜகவிற்காக பணியாற்றிய பெர்னார்ட் கட்சியில் இருந்து அதுவும் மாட்டிறைச்சி தடையை எதிர்த்து ராஜினாமா செய்திருப்பது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.