Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2017

எம் பொண்டாட்டிய கொன்னுப்புட்டாங்களே.. கதறும் கணவர்!


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா கொம்புக்காரனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாலதி என்ற தலித் பெண் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.இரண்டு நாட்களாகியும் டாக்டர் வராததால் நர்ஸ்கள் மட்டுமே பிரசவம் பார்த்திருக்கிறார்கள். நேற்று அதிகாலை பெண்குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாயான மாலதி உயிரிழந்தார்.
'தகவல் தெரிந்ததும் இவரது சொந்த ஊரான 'வன்னிக்குடி' கிராமே திரண்டு சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு வந்து 'மார்க்சிஸ்ட்' கட்சியின் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
அதன்பிறகு தாசில்தார் நாகநாதன், இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.அதுவரைக்கும் பிரேதத்தை வாங்க மறுத்தார்கள்.
'சுகாதாரத்துறை சிவகங்கை மாவட்ட இனண இயக்குனர் யசோதா மணி வந்த பிறகு பத்துலட்சம் ரூபாய் வழங்கவேண்டும், டாக்டர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் ,பிறந்த குழந்தைக்கு உயர்தர மருத்துவம் கொடுக்க வேண்டும் ' என்கிற கோரிக்கைகள் வைக்கப்பட்டது.இழப்பீடுக்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வதாகவும்,சம்மந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு பிரேதப்பரிசோதனை செய்ய சம்மதித்தனர்.




மனைவியை இழந்த கணவர் விஜயக்குமாரிடம் பேசும் போது....
'எனக்கு கலயாணம் முடிஞ்சு ஒரு வருசம் ஆகுது. எங்க ஊர் நர்ஸ் அவுங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்ங்கிறதுக்காக எம் பொண்டாட்டிய கொன்னுப்புட்டாங்க. ரெண்டு நாள் ஆஸ்பத்திரியில் இருந்தோம் டாக்டரே வரல. பொம்பள பிள்ளை பிறந்த சந்தோசத்துல சொந்தம் பந்ததுக்கெல்லாம் சொல்லி முடிக்கிறதுக்குள்ள அவ உசுரு போயிடுச்சு. டாக்டர் நர்ஸ்கள் மேல கேஸ் போட்டு உள்ள தள்ளும் வரை ஓயமாட்டேன் ' என்று சபதமேடுத்தார்.

ஆரம்ப சுகாதாரமையங்களின் தற்காலிக நிலை என்ன? மனசாட்சி உள்ள மருத்துவர்களிடம் பேசினோம்... "கிராமபுறங்களில் உள்ள மருத்துவர்கள் மருத்துவமனைக்கு போவது என்பது விருந்தாளி போல் போய்வருவார்கள்.தனியாக ஆஸ்பத்திரி வைத்திருப்பார்.நோயாளிகளை அங்கே வரச்சொல்லுவது. நர்ஸ்கள் எல்லாமே, கிட்டத்தட்ட 'வசூல் ராஜா' எம்.பி.பி.எஸ் மாதிரி நடக்கும். அரசாங்கம் நல்ல சம்பளம் தருகிறது. (World health organization) கர்ப்பிணி பெண்களை பாதுகாக்க தவறும் 'நர்ஸ்கள்,' டாக்டர்களுக்கு கடுமையான சட்டதிட்டங்களை வகுத்திருக்கிறது. அப்படி இருந்தும் இவர்களின் அலட்சியத்திற்கு அளவே இல்லை" என்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.