June 8, 2017
மாட்டிறைச்சித் தடை எதிரொலி... மேகாலயாவில் இழுத்து மூடப்பட்ட பா.ஜ.க அலுவலகம்!
நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து மேகாலயாவில் உள்ள பா.ஜ.கவினர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு பா.ஜ.க அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
கோப்பு படம்
சந்தைகளில், இறைச்சிக்காக பசு, காளை, எருமை, கன்றுக் குட்டி, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்குத் தடை விதித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இறைச்சி உண்ணும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மாட்டிறைச்சியை அதிகம் பயன்படுத்தும் மேகாலயாவில், மத்திய அரசின் அறிவிப்புக்கு கடுமையான அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகாலயாவில் உள்ள பெரும்பாலான மக்கள் மாட்டிறைச்சி உண்பதால், மத்திய அரசின் தடையை எதிர்த்து, பெர்னார்ட் மராக் என்ற பா.ஜ.க நிர்வாகி தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நேற்று பா.ஜ.கவில் உள்ள மற்றொரு முக்கிய நிர்வாகி பச்சு மராக், தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.கவில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார். பச்சு மராக்கின் ராஜினாமாவைத் தொடர்ந்து சுமார் 200 தொண்டர்கள் இன்று பா.ஜ.கவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மேலும், அவர்கள் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்த கொடியை அகற்றியதோடு, அலுவலகத்தையும் இழுத்து மூடியுள்ளனர்.
மாட்டிறைச்சித் தடை எதிரொலி... மேகாலயாவில் இழுத்து மூடப்பட்ட பா.ஜ.க அலுவலகம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 08, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.