Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2017

பாட்ஷா ரஜினி போல வலம் வந்த வாட்டாள் நாகராஜ் நிலை இப்படி ஆயிடுச்சே..! ஐயோ பாவம்…இனி காத்து போன பலூன்


வாட்டாள் நாகராஜ் பெயரை கேட்டாலே கர்னாடக வாழ் தமிழர்களுக்கு ஒருவித கிலி ஏற்படும்.அவர் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் அரசே அச்சம் கொள்ளும்.ஏனென்றால் அவர் அழைப்பு விடுத்த நாளன்று கர்நாடகாவே ஸ்தம்பித்து விடும்.அனைத்து அமைப்புகளும் கேட்காமலேயே ஆதரவை தேடி வந்து அளிக்கும்.
கன்னட சளுவளி கட்சி தலைவரான வாட்டாள் நாகராஜு பாட்ஷா ரஜினி போல உட்கார்ந்து இருக்க கன்னட அமைப்புகள் தேடி வந்து ஆதரவை அளிக்கும் அதுவும் தமிழர்களுக்கு எதிரான போராட்டம் என்றால் சொல்லவே வேண்டாம்.
அப்படியிருக்க கர்நாடகாவில் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த கோரி வாட்டாள் நாகராஜ் ஜூன் 12ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளார்.
ஆனால் இந்த போராட்டத்திற்கு எந்த அமைப்பும் இதுவரை ஆதரவு அளிக்கவில்லை. முக்கியமாக அவருடன் இரண்டற கலந்த கன்னட ரக்ஷண வேதிகே போன்ற அமைப்புகளும் வாய் திறக்கவில்லை.
இது வாட்டாள் நாகராஜூக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.யாரும் ஆதரவு தெரிவிக்காததால் ஜூன் 12ம் தேதி தனி ஒருவனாக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆனால் அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.இருந்தபோதிலும் அவர்கள் வேலைக்கு வருவதும், வீட்டில் இருப்பதும் ஒன்றுதானே.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.