அமெரிக்காவில் கார் விபத்தில் தன் இரு குழந்தைகளை காப்பாற்றி விட்டு தனது உயிரை இழந்த தாயின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கவின் Philadelphia நகரில் உள்ள Port Richmond பகுதியை சேர்ந்தவர் Rosa Lydia (28) இவருக்கு Leani (11) என்ற மகளும், Jadiyn (9) என்ற மகனும் உள்ளனர்.
சம்பவத்தன்று Rosa கடையில் உணவு வாங்கி விட்டு தனது இரு குழந்தைகளுடன் சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது மூவரையும் இடிக்கும் நோக்கில் ஒரு கார் வேகமாக அவர்கள் அருகில் வந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த Rosa, Leaniஐ கார் மோதாத படி அருகில் தள்ளி விட்டுள்ளார்.
மேலும் தன் மகன் Jadiyn மீது கார் மோதக் கூடாது என எண்ணி அவனை பாதுகாக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் அதையும் மீறி கார் இருவரின் மீதும் மோதியுள்ளது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் Rosa மற்றும் Jadiynஐ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் Rosa பரிதாபமாக உயிரிழந்தார், Jadiynக்கு கால் மற்றும் கை உடைந்துள்ளது.
ஆனாலும் அவன் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கார் விபத்தை ஏற்படுத்திய Ryan Patrick Mchugh (39) என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலை, தாக்குதல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து கூறிய Rosaவின் தந்தை Eugenio, என் மகளின் சடலத்தை அடக்கம் செய்யும் நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது,
நியாயமாக, என் சடலத்தை தான் என் மகள் புதைக்க வேண்டும். ஆனால் நான் அதை செய்கிறேன் என சோகத்துடன் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.