Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2017

யார ஏமாத்த பாக்குறீங்க..? சந்தி சிரிக்கும் தந்தி.. எடப்பாடி டீ கடையில் ஆயிரம் ரூபாய் எடுத்து நீட்டின


புதுக்கட்டை மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரியை திறந்து வைக்கும் விழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றிருந்தார்.
விழா முடிந்த பின்பு திருச்சி விமான நிலையம் செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதுகோட்டை மாவட்டம் கீரனூர் நெடுஞ்சாலையில் பயணித்த போது பள்ளி குழந்தைகள் முதல்வரை பார்த்து கை காட்டி உள்ளனர்.
உடனே தனது காரை நிறுத்தி விட்டு பள்ளி குழந்தைகளிடம் சென்று நீங்கள் நன்றாக படித்து மருத்துவர் ஆக வேண்டும்.
அதற்காக சிரம படக்கூடாது என்று தான் உங்கள் ஊருக்கு அருகிலேயே மருத்துவ கல்லூரி தொடங்கி உள்ளேன் என்று கூறி இருக்கிறார்.
பின்பு அவ்வழியாக போகும் போது சாலை ஓர டீ கடையில் நின்று டீ குடித்து விட்டு தன் பக்கெட்டில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டினாராம்.
அதற்கு டீ கடைக்காரர் வேண்டாம் என்று மறுத்து விட்டாராம்.
இவ்வாறு தினத்தந்தி நாளிதழின் செய்தியில் இடம்பெற்றிருந்தது.
இது தான் சந்தேகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து ஐநூறு, மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே தற்போது புழக்கத்தில் உள்ளன. இனிமேல் தான் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழகத்தில் வரும்.
அப்படி இருக்கையில் எடப்பாடி எப்படி ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்ட முடியும். ஒரு வேலை தனிதனி நூறு ரூபாயாகவோ அல்லது ஐநூறு ரூபாய் இரண்டாகவோ கொடுக்க முற்பட்டாலும் ஒரு டீக்கு எதற்கு ஆயிரம் நீட்ட வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.