June 21, 2017
லிஃப்ட் கொடுப்பது போன்று வாலிபர், முதியவர்களை மயக்கி சென்னையில் பணம் பறிக்கும் பெண் – சிசிடிவி வீடியோ
நகை பணம் வைத்துள்ள வாலிபர்கள் முதியவர்களை தனது வண்டியில் லிஃப்ட் கொடுப்பது போன்று ஏற்றிக் கொண்டு அவர்களுடன் வண்டியில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறித்த ஆஷா சவுந்தர்யா என்ற பெண்ணை சென்னை டி நகர் போலிசார் கைது செய்துள்ளனர்.
பெங்களுருக்கு தப்பிச் செல்ல முயன்ற போது போலிசார் இவரை கைது செய்துள்ளனர்.
இதுவரை சென்னையில் 7 பேரை இதே போன்று வண்டியில் ஏற்றி அவர்களிடம் மயக்கி பேசி நெருக்கமாக அமர வைத்து பின்னர் என்னிம் தவறாக நடந்து கொண்டாய் புகார் செய்து விடுவேன் என மிரட்டி பணம் நகையை பறித்துள்ளார் இந்த பெண்.
இவர் ஏற்கனவே கொள்ளை வழக்கில் 3 ஆண்டுகள் பெங்களுர் சிறையில் இருந்து தற்போது தான் ஜாமினில் வெளிவந்துள்ளார்.
வெளியே வந்ததும் , சென்னையில் தனது கைவரிசையை காட்டியுள்ளார் ஆஷா சவுந்தர்யா. வயதான இந்த பெண் தன்னை இளமையாக காட்டிக் கொள்ள மெக்கப் ஜீன்ஸ் டீ சர்ட் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளார். கோடம்பாக்கத்தில் இந்த பெண்ணிடம் நகை பணத் பறி கொடுத்த முதியவர் அளித்த புகாரில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலிசார் இந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
பொதுமக்கள் கவனமாக இருக்கமாறும் அறிமுகம் இல்லாதவர்களின் வண்டியில் ஏற வேண்டாம் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
லிஃப்ட் கொடுப்பது போன்று வாலிபர், முதியவர்களை மயக்கி சென்னையில் பணம் பறிக்கும் பெண் – சிசிடிவி வீடியோ
Reviewed by Admin
on
June 21, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.