Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2017

திமுகவினர் சாலை மறியல் பல்வேறு இடங்களில் ! ஸ்டாலின் கைதைக் கண்டித்து !!


சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டதை கண்டிக்கும் வகையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ராஜாஜி சாலையில் திமுக உறுப்பினர்கள் மறியல் செய்தனர். திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றத்தை கண்டித்தது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

திமுக எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி கட்சியினரும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராஜாஜி சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் எங்கும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர் பேருந்து நிலையம் அருகே 100க்கும் மேற்பட்ட திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.