June 6, 2017
பசுவைக் கொன்றால் தேசிய பாதுகாப்பு சட்டம்! இதே வேலையாகவே இருப்பங்களாலோ
பசுக்களை கொல்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென, உத்தரபிரதேச காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இறைச்சிக்காக பசுக்களை கொல்லப்படுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்தங்களை கொண்டு வந்தது. இதற்கு பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜக ஆளும் மாநிலங்கள் மத்திய அரசின் உத்தரவை பின்பற்றத் தொடங்கியுள்ளன. பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில், பசுக்களை கடத்துவோர் மற்றும் அவற்றை கொல்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
லக்னோவில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய, அம்மாநில காவல்துறை தலைவர் சுல்கான் சிங் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்த சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுபவர்கள் மூன்று மாதமோ அல்லது அதற்கு மேலாகவோ சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பசுவைக் கொன்றால் தேசிய பாதுகாப்பு சட்டம்! இதே வேலையாகவே இருப்பங்களாலோ
Reviewed by மறத்தமிழன்
on
June 06, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.