June 27, 2017
தொப்பையை குறைக்க உதவும் கொள்ளு ! - வீடியோ
கொள்ளு பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல், கொழுப்பு தன்மை எனப்படும் ஊளைச்சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளு பருப்புக்கு உண்டு. மேலும், இதில் அதிகளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளு பருப்பை ஊற வைத்து சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளு பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும்.
உடல் உறுப்புகளை பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண் நோய் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். பெண்களுக்கான வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்தும். மாதாந்திர ஒழுங்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும், அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியை தூண்டும். தாதுவை பலப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக்கூடியது. கடினமான பணிகளை செய்யும் குதிரைக்கு நம் முன்னோர் கொள்ளு அளித்தனர். இதில் இருந்தே அதன் மகத்துவத்தை புரிந்துகொள்ளலாம்.
குளிர்காலத்தில்தான் அதிகம் சளிபிடிக்கும். இந்த காலங்களில் கொள்ளு சூப் குடித்தால் சளி பிடிக்காது. சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக்கொள்வது உடல் எடையை குறைக்கும். கொள்ளு பருப்பை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளுவை அரைத்து, பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.
நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியைபோட்டால் அருமையாக இருக்கும். இப்படி செய்ய முடியாதவர்கள் கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு வைத்து, அவ்வப்போது உண்டு வந்தாலும் உடல் எடை குறையும்.
தொப்பையை குறைக்க உதவும் கொள்ளு ! - வீடியோ
Reviewed by Admin
on
June 27, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.