இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாக சுற்றி வருகிறது. இதையடுத்து சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
வயது முதிர்ந்த அந்த ஆண் நோயாளியை எக்ரே அறைக்கு அழைத்துச் செல்ல வீல் சேர் மறுக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி கால்கள் இரண்டையும் பிடித்து தர தரவென இழுத்துச் சென்றுள்ளார்.
"இந்த வீடியோ 2 நாட்கள் முன்பு ஷூட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எனக்கு தகவல் வந்ததும் மறைத்துவிட முயலவில்லை. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்" என மருத்துவமனை இயக்குநர் சுஷில் குமார் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மருத்துவமனையில் போதிய அளவுக்கு வீல் சேர் மற்றும் ஸ்ட்ரெட்சர்கள் உள்ளன. அப்படியிருந்தும் இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்பது எனக்கு புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
கர்நாடகாவில் அரசு மருத்துவமனைகளில் இப்படிப்பட்ட அவலம் நடைபெறுவது புதிது கிடையாது. மே 23ம் தேதி, கோலார் அரசு மருத்துவமனையின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், பிறந்து 2 நாட்களேயான குழந்தைக்கு காயம் ஏற்பட்டது.
கடந்த மார்ச் 23ம் தேதி ஹூப்ளி மாவட்ட அரசு மருத்துவமனையில் 4 கர்ப்பிணி பெண்கள் ஒரே ஸ்ட்ரெட்சரில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.