June 12, 2017
மஹாராஷ்டிர மாநில அரசைப்போல தமிழக அரசும் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்
.
மஹாராஷ்டிராவைப் போல தமிழக அரசும் விவசாயிகள் கடன்களை ரத்து செய்யவேண்டும் - திருமாவளவன் கோரிக்கை..!
கார்த்திக்.சி
மஹாராஷ்டிர மாநில அரசைப்போல தமிழக அரசும் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயக் கடன்கள் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும்; விளைபொருட்களுக்கு ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்கவேண்டும் என மஹாராஷ்டிர மாநில விவசாயிகள் போராடிவந்தார்கள். அந்தப் போராட்டத்தின் தாக்கம் மத்தியப்பிரதேசத்திலும் ஏற்பட்டதால் அங்கும் விவசாயிகளின் போராட்டம் வெடித்தது. அதில் ஆறு விவசாயிகள் போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
விவசாயிகளின் கிளர்ச்சி தீவிரமடைவதைக் கண்டு அச்சமடைந்த பா.ஜ.க தலைமையிலான மஹாராஷ்டிர மாநில அரசு இப்போது விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய முன்வந்திருக்கிறது. அதன் வழிமுறைகளை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்கு குழு ஒன்றை அமைத்து அம்மாநில முதலமைச்சர் ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இது வரவேற்கத்தக்கது.
2014-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி தமிழ்நாட்டில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் 895 பேர் தற்கொலை செய்துகொண்டனர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலையில் இந்தியாவிலேயே நான்காவது இடத்தில் தமிழ்நாடு இருந்தது.
2015-ல் தற்கொலைசெய்துகொண்டோரின் எண்ணிக்கை 606 ஆக இருந்தது என்றபோதிலும் கடந்த 2016-ம் ஆண்டு மழை பொய்த்துப் போனதால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அதன் முழுமையான விவரங்களை இன்னும் அரசு வெளியிடவில்லை.
விவசாயக் கடன்களை முற்றாகத் தள்ளுபடி செய்யவேண்டுமெனத் தமிழ்நாடு விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்தப் போராட்டமே இந்தியா வெங்கும் விவசாயப் போராட்டங்களுக்குத் தூண்டுதலாக அமைந்தது. இப்போது மஹாராஷ்டிர மாநில விவசாயிகளின் போராட்டம் வெற்றிகண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசு இன்னும் விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியம் செய்துவருகிறது.
இனிமேலும் காலம் கடத்தாமல் மகராஷ்டிர மாநில அரசைப்போலவே தமிழக அரசும் அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்' என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநில அரசைப்போல தமிழக அரசும் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 12, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.