June 6, 2017
சாப்பாட்டை சிந்தியதற்காக குழந்தையை இறக்கமின்றி அடிக்கும் பெண்.. கொலைநடுங்க வைக்கும் வைரல் வீடியோ!
6 வயது மதிக்கத்தக்க குழந்தையை பெண் ஒருவர் ஸ்கேலால் கடுமையாக அடித்து துன்புறுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நேற்று இரவு முதல் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. 2 .50 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில், 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் மரக்கட்டையை வைத்து 6 வயது மதிக்கத்தக்க குழந்தையை கடுமையாக அடிக்கிறார்.
உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அந்த குழந்தை கீழேயும் சட்டை மேலும் உணவை சிந்தியதற்காக அந்தப் பெண் குழந்தையை சுமார் 30 முறைக்கும் அதிகமாக மாட்டை அடிப்பது போல அடித்துள்ளார்.
வலி தாங்காமல் கதறி துடித்து ஒரு மூளையில் போய் நின்று அழும் குழந்தையை மீண்டும் வந்து சட்டையை கழற்றி கொடூரமாக அடித்துள்ளார் அந்தப் பெண். ஒழுங்காக சாப்பிட மாட்டாயா செத்துப் போ, இங்கேருந்து போய் எங்கயாவது செத்துப் போ என்று கூறி அந்தப் பெண் குழந்தையை அடிக்கும் காட்சிகள் மனதை உறைய வைக்கிறது. நெஞ்சை பதைபதைக்கும் இந்த காட்சிகளை அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பெண் குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து போலீஸார் நடவடிக்கையில் குதித்தனர். இதைத் தொடர்ந்து அப்பெண் கைது செய்யப்பட்டார்.
சாப்பாட்டை சிந்தியதற்காக குழந்தையை இறக்கமின்றி அடிக்கும் பெண்.. கொலைநடுங்க வைக்கும் வைரல் வீடியோ!
Reviewed by மறத்தமிழன்
on
June 06, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.