June 8, 2017
சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி... ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்றவர்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை இன்று ஹிந்து சேனா அமைப்பைச் சேர்ந்த 2 பேர் தாக்க முயற்சித்தனர். மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்து, அவர் செய்தியாளர்களைச் சந்திக்கும் போது இந்த சம்பவம் நடந்தது. இதற்கு நாடு முழுவதும் பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இதனிடையே சீதாராம் யெச்சூரி தாக்கப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். பழனி, கும்பகோணம், விருதுநகர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சீதாராம் யெச்சூரி தாக்கப்பட்டதுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனும் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி... ஆர்.எஸ்.எஸ் அமைப்பைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 08, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.