Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2017

கேப்டன், ஸ்டாலின், தீபா எல்லாம் எதுக்கு ஃபேமஸ் தெரியுமா?


உலக எஸ்.டி.டியை பொறுத்தவரை, 'இந்தந்த சமாச்சாரங்களாலதான் இவங்க இவங்களுக்கு எல்லாம் பெருமை'ன்னு ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு. ஆனா, தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும், இது அப்படியே தலைகீழ். இந்தந்த வி.ஐ.பிகளாலதான் சில குறிப்பிட்ட சமாச்சாரங்களுக்கே பெருமை. 'அட, கொஞ்சம் தெளிவா சொல்லுங்கய்யா'னு உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது. மேலே படிங்க. உங்களுக்கே புரியும்!
'மனசு சரியில்லை, குழப்பமா இருக்கு'ன்னு கோயிலுக்கு போனாலும் சரி, டாக்டர்கிட்ட போனாலும் சரி, 'தியானம் பண்ணுங்க சார். மனசு நல்லா இருக்கும்'ன்னு அட்வைஸ் கொடுத்து, மடை மாத்திவிடுவாங்க. வழக்கம்போல அதெல்லாம் நாம காதுலயே வாங்கமாட்டோம். ஆனா, அம்மா சமாதியில பன்னீர் போய் தியானம் பண்ணதுல இருந்து அந்த வார்த்தைக்கே தனி கெத்து வந்துடுச்சுல. இனியும் தியானம் பண்ணுங்கனு சொன்னா அசால்ட்டாவா இருப்பீங்க?
அடுத்து... மேடைப்பேச்சு. 'அப்படி என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன்?'னு கேக்குற க்ளிஷே வண்டுமுருகன் டெம்ப்ளேட்டை உடைச்சது நம்ம கேப்டன்தான். முன்னாடி இருக்குற கூட்டத்தை அதட்டுறது, மேடையிலேயே பொடனில அடிக்கிறது, நாக்கைத் துருத்துறது, மைக்கை நோண்டுறதுனு கேப்டன் பண்ணதெல்லாம் வேற லெவல். அதனாலதான், 'மேடைப்பேச்சுனாலே கேப்டன்தான்'னு வரலாற்றுல எழுதுனாங்க. இனி வர்ற தலைமுறைக்கு மேடைப்பேச்சுனாலே கண்ணு சிவக்குற கேப்டன் முகம்தானே நினைவுக்கு வரும்.
பணத்தை சிக்கனமா வச்சுக்குறவங்க பத்தி கேள்விப்பட்டிருப்போம். பெட்ரோல் டீசலை சிக்கனமா யூஸ் பண்றவங்களைக்கூட பாத்திருப்போம். ஆனா வார்த்தையை சிக்கனமா பயன்படுத்துறவங்களை பாத்திருக்கீங்களா? நீங்க பாக்க வேண்டியது மணிரத்னம் படங்களைத்தான். 'என்ன? ஏன்' எதுக்கு? - இப்படி ஒரு வார்த்தைல கேள்வி கேட்டே இன்டர்வெல் வரைக்கும் படத்தை ஓட்டிடுற மணிரத்னம் மூலமா சிக்கனத்துக்கே புது அர்த்தம் கிடைச்சுருக்கே!
நாகேஷ், சந்திரபாபு, கவுண்டமணி, வடிவேலுனு லெஜன்ட்கள் கலக்குன காமெடி ஏரியா இது. ஆனா, இவங்க எல்லாரையும் ஈஸியா தூக்கிசாப்பிட்டது நம்ம தீபாதான். புதுசா கட்சி ஆரம்பிச்சது, அந்தக் கொடுமை பத்தாதுனு அவர் கணவர் தனிக்கட்சி ஆரம்பிச்சது, கட்சி பேர் சரியில்லனு மாத்துனது, போயஸ் கார்டன்ல ஆக்ஷன் ப்ளாக் நடத்துனதுனு முழு நீள காமெடி படத்தை காட்டிகிட்டு இருக்காங்க தீபா. இவங்களால காமெடிக்கே ஒரு புது அர்த்தம் கிடைச்சுருக்கு!
காமெடிக்கு ஒரு அர்த்தம் கொடுத்தது தீபான்னா, பொறுமைக்கு புது விளக்கம் கொடுத்தது நம்ம தளபதி. வைகோ ம.தி.மு.க ஆரம்பிச்ச காலத்துல இருந்து முதல்வர் வேட்பாளரா இருக்காரு ஸ்டாலின். ம.தி.மு.கல ஆளே இல்லாத நிலைமை வந்தப் பிறகும் ஸ்டாலினால முதல்வர் ஆகமுடியலை. இப்பவும்கூட, ஆட்சி கவுந்துடும், அடுத்து நாமதான்னு பொறுமையா காத்திட்டுருக்கார். இப்படி ஒரு நாற்காலிக்காக 25 வருஷமா காத்திட்டிருக்கிற ஸ்டாலினால பொறுமைக்கே பெருமைன்னு சொன்னா அது மிகையாகாது.
இப்படியே இன்னும் நிறைய சொல்லலாம். ஆனா, எண்ட் கார்ட் போட்டு முடிச்சுக்குறேன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.