June 9, 2017
விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவதில்லை: சொல்கிறார் வெங்காயம்
விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர்பாசன வசதிக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை சில மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவதில்லை என சாடினார். அனைத்து விவகாரங்களிலும் மத்திய அரசை குறை கூறுவதும் கூட ஒரு குறையே என்றார்.
தலைவர்கள் மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற வெங்கையா, ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விதிகளை பின்பற்றுவதில்லை என்றார். 50 ஆண்டுகளுக்கும் மேல் நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ், தற்போதைய மோடி அரசை கேள்வி கேட்பதாக குறிப்பிட்டார். மேலும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது 24 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அப்போது வாய்திறக்காத சோனியா, ராகுல் மற்றும் கம்யூனிஸ்ட்கள், தற்போது 5 விவசாயிகள் எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ளதற்காக வாய் திறந்துள்ளனர் என குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவதில்லை: சொல்கிறார் வெங்காயம்
Reviewed by Admin
on
June 09, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.