Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2017

தர்பூசணியை சாப்பிட்ட பின் நீர் குடிப்பது நல்லதா? கெட்டதா? ஏன்?


தர்பூசணியை கோடைகாலத்தில் விரும்பாதவர்கள் யார்? குறிப்பாக குழந்தைகளின் ஃபேவரி பழங்களில் தர்பூசணிக்குதான் முதலிடம். தர்பூசணி சிறந்த நீர்ச் சத்து கொண்டவை. பல வித ஊட்டச்சத்துக்களும் நிரம்ப பெற்றவை.
லைகோபீன், பொட்டாசியம் மற்றும் நார்சத்து நிரம்பிய பழம். இப்படி தர்பூசணியிடன் நிறைய நன்மைகள் தரும் பக்கம் இருந்தாலும், அதனைப் பற்றி தவறான நம்பிக்கைகளும் உலவுகின்றன. அதில் ஒன்றுதான் தர்பூசணிய சாப்பிட்ட பின் நீர் குடிக்கக் கூடாது என்பது. அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா?
தர்பூசணி பலவித நன்மைகள் நமக்குத் தருகின்றன. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. இதிலுள்ள சிட்ருலின் நைட்ரிக் அமிலத்தை தூண்டுகிறது. இதனால் ரத்த அழுத்தத்தை ஒழுங்கிபடுத்த ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
தர்பூசணியில் 96 சதவீதம் நீர் இருக்கிறது, . அதனுடன் நாம் நீர் குடித்தால் , ஜீரண உறுப்புகளில் சுரக்கும் என்சைம் திரவம் அடர்த்தி குறைந்து அஜீரணம் மற்றும் வாயு பிரச்சனை உண்டாகும்.
இது நீர் மற்றும் ஃப்ரக்டோஸ் எனப்படும் சர்க்கரை இருப்பதால் அதனை சாப்பிட்ட பின் நீர் குடித்தால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுத்திவிடும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.
ஆயுர்வேதத்தின்படி சில உணவுகள் கூட்டுச் சேர்க்கை இயல்பான ஜீர்ண மண்டலத்தின் வேலையை பாதிக்கும். தோஷங்களை உண்டு பண்ணும். எனவே தர்பூசணியை தனியாக சாப்பிடுவது நல்லது. என்று ஆயுர்வேத மருத்துவர். வசந்த் லாட் கூறுகின்றார்.
உடலில் செரிப்பதற்கான குடல்களில் உருவாகும் நல்ல பேக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் செயல்களுக்கும் தேவையான சர்க்கரையும், நீரும் தர்பூசணியில் இருப்பதால், அதனை சாப்பிட்ட பிறகும் நீர் குடித்தால், நல்ல பேக்டீரியாக்கள் அடித்துச் செல்லப்பட்டு, செரிமான பிரச்சனையை உண்டு பண்ணும் என்று ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சு சூத் கூறுகின்றார்.
தர்பூசணியுடன் வேறெந்த உணவுப் பொருளும் சாப்பிடக் கூடாதென்று ஆயுர்வேதம் கூருகின்றது. அப்படி சேர்ந்து சாப்பிட்டால் ஜீரண சக்தி குறைந்து, அமிலத்தன்மை அதிகரிக்கும் சூழ் நிலை உருவாகுமாம்.
அதனால்தான் ஜீரண பிரச்சனை இருப்பவர்கள் தர்பூசணியை சாப்பிட்ட பின் நீர் குடிப்பதால் வயிறு உப்புசம் மற்றும் அசிடிட்டி உண்டாவதாக உணர்கிறார்கள்.
எது எப்படியோ அறிவியல் பூர்வமாக இதனைப் பற்றி எதுவும் தெளிவாக தெரியவில்லையென்றாலும், அதன் நன்மைகளை மட்டும் பார்த்து, தர்பூசணியை வயிறு நிறைய நாம் உண்ணலாம். அதன் சுவையை ரசிக்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.