June 6, 2017
கண் தானம் செய்த விஜய் சேதுபதி:
நடிகர் விஜய் சேதுபதி தனது கண்களை தானமாக வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
கோலிவுட்டின் பிசியான ஹீரோக்களில் ஒருவர் விஜய் சேதுபதி. கை நிறைய படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதனாலேயே டேட்ஸ் இல்லாமல் தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து வெளியேற வேண்டியதாகிவிட்டது.
மதுரையில் நடந்த தனியார் கண் மருத்துவமனையின் துவக்க விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.
கண்தானம்
மதுரை நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி தனது கண்களை தானம் செய்வதாக வாக்குறுதி அளித்தார். மேலும் தன்னை போன்று கண் தானம் செய்யுமாறு தனது ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரசிகர்கள்
விஜய் சேதுபதியின் கண் தான அறிவிப்பை கேட்டு திரையுலகினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜய் சேதுபதியின் வழியில் கண் தானம் செய்ய ரசிகர்கள் பலர் முடிவு செய்துள்ளனர்.
கருப்பன்
விஜய் சேதுபதி மாதவனுடன் சேர்ந்து விக்ரம் வேதா படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவர் கருப்பன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
யோகி பாபு
என் சகோதரர் விஜய் சேதுபதி கண் தானம் செய்துள்ளதாக கேள்விப்பட்டேன். சூப்பர் ஸ்டார் என நகைச்சுவை நடிகர் யோகி பாபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கண் தானம் செய்த விஜய் சேதுபதி:
Reviewed by மறத்தமிழன்
on
June 06, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.