டிசம்பர் 16ஆம் தேதி ரிசர்வ் வங்கி புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.
அவை ‘இ’ என்னும் உள்ளீடு எழுத்துகொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்திய ரிசர்வ் வங்கி ‘எ’ உள்ளீடு எழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் புழக்கத்தில் இருக்கும் ‘இ’ உள்ளிடு கொண்ட 500 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
பணமதிப்பிழப்புக்குப் பின் வெளியிடப்படப் புதிய 500 ரூபாய் நோட்டுகளைப் போலவே தான், இதுவும்
தற்போது இந்த புதிய உள்ளீடு கொண்ட ரூபாய் நோட்டுகளும் மகாத்மா காந்தி வரிசை ரூபாய் நோட்டுகளாக இருக்கும்.
புதிய 500 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் அவர்களின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும்.
மக்கள் பயப்பட வேண்டாம் பழைய நோட்டும் செல்லும்..!
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் என்.எஸ்.விஸ்வநாதன் மார்ச் மாதத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க எவ்விதமான திட்டமும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்,
ஆனால் இப்போது இத்தகை சூழ்நிலையில் அனைத்து அறிவிப்புகளுக்கும் மாறாக ரிசர்வ் வங்கி ‘எ’ உள்ளீடு எழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு மக்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.
5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியாகும் என்பது வதந்தி என்று மத்திய மாநில நிதியமைச்சாரான அர்ஜூன் ராம் மெஹ்வால் கூறியுள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.