நாகர்கோவில் அருகே இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் ஈத்தாமொழியை சேர்ந்த தம்பதி கண்ணன்- திவ்யா. இவர்களுக்கு ஏற்கனவே அனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 22ம் திகதி திவ்யாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
பிரசவத்துக்கு பின்னர் திவ்யா குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2ம் திகதி திடீரென இரண்டு குழந்தைகளும் இறந்து போயின, குழந்தைகளை கண்ணன் வீட்டு வளாகத்தில் புதைத்துள்ளனர்.
பால் அருந்தும் போது இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து புகார்கள் வந்ததால் வழக்கு பதிவு செய்த பொலிசார் குழந்தைகளின் சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
அதில் குழந்தைகள் இருவரும் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், ஏற்கனவே பெண் குழந்தை இருப்பதால் இரட்டை குழந்தைகளை கொன்றதை திவ்யா ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து திவ்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.