திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்புவிற்கு அழைப்பில்லை.
அந்த சோகம் ஒருபுறம் இருக்க, சத்தியமூர்த்தி பவனுக்கு ராகுல்காந்தி வந்த போது குஷ்புவை ஓரங்கட்டிவிட்டார் திருநாவுக்கரசர். இந்த இரண்டு சம்பவங்களுமே குஷ்புவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாம்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா ஜூன் 3ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. சட்டசபை வைரவிழாவை தேசிய தலைவர்களை அழைத்து கொண்டாடி விட்டார்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், இடதுசாரிக் கட்சிகளின் தேசியத் தலைவர்கள், திருணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டெரிக் ஓ பிரையன், காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மாநில தலைவர் திருநாவுக்கரசர், உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர். ப.சிதம்பரத்தில் ஒரு ஓரத்தில் ஒதுக்கி விட்டதுதான் சோகம்.
கருணாநிதி விழாவில் மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் நக்மா பங்கேற்று நடுநாயகமாக அமர்ந்திருந்தார். ஆனால் குஷ்புவிற்கு அழைப்பே அனுப்பவில்லையாம். இது அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது.
கருணாநிதி மீது அன்பு வைத்திருந்தவர் குஷ்பு. ஆனால் ஸ்டாலின் மீது அந்தளவிற்கு ஒட்டுதல் கிடையாது. இது தலைவர் பற்றிய பேட்டியிலேயே பகிரங்கமாக வெளிப்படுத்தியவர். அப்போது நடந்த சர்ச்சையில்தான் கட்சியை விட்டே வெளியேறினார். ஆனால் நக்மா சமீபத்தில் கூட ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
அங்கேதான் அப்படி என்றால் சத்தியமூர்த்தி பவனிலும் குஷ்புவிற்கு உரிய மரியாதையில்லையாம். சத்தியமூர்த்தி பவனுக்கு ராகுல்காந்தி வந்தபோது குஷ்புவை ஓரங்கட்டி விட்டாராம் திருநாவுக்கரசர். அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களினால் குஷ்பு மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறாராம்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.