June 27, 2017
காங்., பிரமுகருக்கு கொலை மிரட்டல் : மாட்டிறைச்சி விவகாரத்தில் அமைச்சர் நிலோபரை விமர்சித்தவருக்கு !
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் மாட்டிறைச்சி விவகாரத்தில் அதிமுக அமைச்சரவை விமர்சித்த காங்கிரஸ் பிரமுகருக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநிலத் தலைவர் வாணியம்பாடியைச் சேர்ந்த அஸ்லாம் பாஷா. இவர் மாட்டிறைச்சி விவகாரத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைச்சருமான நிலோபர் கபிலை விமர்சித்து பேட்டியளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் அஸ்லாம் பாஷாவுற்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாபக கூறப்படுகிறது. இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம்மையும் தனது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக அமைச்சரின் ஆதரவாளர் என்று கூறி மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறினார்.
மாட்டிறைச்சி விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர திரானியில்லாதவர் என அமைச்சர் நிலோபரை, அஸ்லாம் பாஷா விமர்சித்ததே பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வாணியம்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் பாஷா புகார் அளித்துள்ளார்.
காங்., பிரமுகருக்கு கொலை மிரட்டல் : மாட்டிறைச்சி விவகாரத்தில் அமைச்சர் நிலோபரை விமர்சித்தவருக்கு !
Reviewed by Admin
on
June 27, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.