Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2017

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியைத் தொடர்வோம்': ஸ்டாலின் அறிவிப்பு!


'தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தி.மு.க. தனது மக்கள் பணியைத் தொடரும்' என கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குளங்களைத் தூர் வாரும் பணியை மேற்கொண்டுவரும் ஸ்டாலின், இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் குளம் தூர்வாரும் பணியைத் துவக்கிவைத்தார். தூத்துக்குடியின் சில்வார்புரம் பகுதியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், 'தமிழகத்தின் அத்தனை பொதுத்துறைகளும் செயலற்றுள்ளன. ஆனால், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தி.மு.க. தனது மக்கள் பணியைத் தொடர்ந்து செய்துவருகிறது. பல்வேறு பிரச்னைகளிலும் மத்திய அரசுக்கு எதிராகக் குரல்கொடுக்காமல் மவுனம் சாதித்துவருகிறது, தமிழக அரசு' எனக் கூறினார்.
மேலும், 'மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைக்கூட தி.மு.க. கவனம் எடுத்து செயலாற்றிவருகிறது. தற்போது, மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, திமுக-வினர் குளங்களைத் தூர் வாரும் பணியை மேற்கொண்டுவருகின்றனர். இதுபோல பலவற்றையும் தொடர்ந்து செயலாற்றுவோம்' எனக் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.