Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2017

தமிழகத்தின் நீர் வளத்தை உறிஞ்சும் அதானி....


தமிழகத்தின் கமுதி பகுதியில், தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான சூரிய மின் உற்பத்தி மையம் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் கமுதியை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் முற்றிலுமாக காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இனி காணலாம்...

நிலத்தடி நீரை உறிஞ்சும் அதானியின் ஆலை

➤ கமுதியில் 2,500 ஏக்கர் பரப்பில் உலகின் மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி மையம் இயங்கி வருகிறது.

➤ கெளதம் அதானிக்கு சொந்தமான இந்த ஆலையில் இருந்து 648 மெகா வாட் ஆற்றல் உற்பத்தி.

➤ மின் உற்பத்திக்காக 25 லட்சம் சூரிய ஆற்றல் தகடுகள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன.

➤ சூரிய மின் உற்பத்தி தகடுகளை சுத்தம் செய்ய தினசரி 2 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

➤ தகுந்த அனுமதி பெறாமல் கோட்டை மேடு ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீரை உறிஞ்சுவதாக புகார் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.