Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2017

ஒப்புக்காவது ஊட்ல வந்து படுய்யா..! வீட்டு ஓனர் கதவைத் தட்டுறான் : ஒரு இளம் மனைவியின் கதறல்!


சென்னை புற நகர் ஏரியாவில் ஒரு அரசு மதுபான கடை வாசலில் ஒரு இளம் பெண் தனது கணவனைத் தேடி வாசலில் நின்றார்.
அவளது உடையிலும், முகத்திலும் வறுமையும் ஏக்கமும் தெளிவாக தெரிந்தது. சற்று நேரம் அந்தப் பெண்ணைக் கவனிக்க ஆரம்பித்த போது,
அரை மணிநேரம் கழித்து தளர்ந்த நடையுடன் தள்ளாடியபடியே அவளின் கணவன் வெளியே வந்தான். நிற்க முடியாமல் தள்ளாடிய அவனை அவனது மனைவி ஓடிச்சென்று தங்கி பிடிக்க..திமிறினான்.
ஒருகட்டத்தில் அங்கேயே விழுந்தும் விட்டான். அந்த இளம் பெண் அவனை எழுப்ப படாதபாடு படு பட்டாள்.
“யோவ் எந்திரியா உன் கால்ல வேண்ணா உழறேன்….ஒப்புக்காவது ஊட்ல வந்து படுய்யா..,ஊட்டு ஓனர் தெனமும் கதவைத் தட்டி படுக்க கூப்பிடுறான்யா எந்திரிச்சு வாய்யா..,
கதறியபடி அவள் கணவனை எழுப்ப..அவன் அசையவே இல்லை. பரிதாபப்பட்ட நான்கு பேர் அந்த போதை கணவனை தூக்கி நிறுத்தி நாலு போடு போட்டு தெளிய வைத்தார்கள்.
அவன் வாய்க்கு வந்தபடி மனைவியை திட்டிக் கொண்டே நடந்து சென்றான். நாம் அது என்ன.. வீட்டு ஓனர் கதைத் தட்டுறான் என்றோம்.
நாங்க இருக்குற ஏரியா படிப்பறிவு அதிகம் இல்லாத கூலித் தொழிலாளிகள் நிறைந்த பகுதி. குடிக்காமல் யாரும் இருக்க முடியாது.
அப்படி முழு நேரமும் போதையில் இருக்கும் குடிகாரர்களின் மனைவிகளுக்கு வீட்டு ஓனர்கள் பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுப்பார்கள்.
அதிலும் கொஞ்சம் அழகான பொண்ணுகளா இருந்தால் தப்பிப்பது கஷ்டம் என்றார்கள். பகீர் என்கிறது…!
அரசாங்கம் திறந்து வைத்திருக்கும் டாஸ்மாக் என்னென்ன விளைவுகளை எல்லாம் உண்டாக்கி இருக்கிறது..!பாருங்க

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.