Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2017

பெண்ணின் காதில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு




ஈரோடு: டாஸ்மாக் போராட்டத்தில் பெண்ணின் காதில் அறைந்து செவிடாக்கி சர்ச்சைக்குள்ளான ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், சாமாளாபுரத்தில் கடந்த ஏப்ரல்11ஆம் தேதி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு, டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராடினர். அப்போது, அப்போராட்டத்தை தடுத்து நிறுத்த எண்ணிய போலீஸார் போராடிய பெண்கள் மீதும், பொதுமக்களின் மீதும் தடியடி தாக்குதல் நிகழ்த்தினர்.

இந்த தாக்குதலில் 15க்கும் மேற்பட்ட மக்கள் பலத்த காயம் அடைந்தனர். இதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஈஸ்வரி என்ற பெண்ணில் கன்னத்தில் ஓங்கி அடித்தார். இதனால், அப்பெண்ணுக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈஸ்வரியைத்தாக்கி, செவித்திறனை குறைத்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி, மனிதநேயர்கள் பலரும் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை, பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்தது. இந்தப் பட்டியலில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெயரும் இடம் பெற்றுள்ளது. திருப்பூர் மதுவிலக்கு கூடுதல் எஸ்பியாக இருந்த பாண்டியராஜன், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பாண்டியராஜனின் பதவி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பெண்களை தாக்கியவருக்கு பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றம் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பெண்ணின் காதில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.