Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2017

தமிழா நினைவு கொள் தமிழக விவசாயி பிரச்சனை தனிமனித பிரச்சனை அன்று..


உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மட்டுமா செயல்படுகிறது? ஆதாரை கட்டாயமாக்க கூடாது என உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு அனைத்து இடங்களிலும் ஆதாரை கட்டாயமாகியது..
மத்திய அரசே உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத போது, மாநில அரசுகள் மட்டும் மதிக்குமா??
அன்று கர்நாடகவை தண்ணீருக்கு வரம்பு எல்லை தெரிவித்து,தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக விவசாயிகளை பாடாய்படுத்தியது கர்நாடக, அந்த  லிஸ்டில் இன்று ஆந்திரா..
தமிழக விவசாயிகளின் போதாத நேரம் போலும், இன்னல்கள் மேல் இன்னல்..
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது.
இதனை எதிர்த்து வலியுறுத்தி தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஒரு தடுப்பணைக்கு 7 லட்சம் வீதம் 4 தடுப்பணைகளுக்கு 28 லட்சம் ரூபாய் மதிப்பு வாய்ந்த அணை பணி ஆரம்பித்தது ஆந்திரா..
இந்த அணையால் தமிழகத்திற்கு என்ன பிரச்சனை..??
இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்திற்கு கிடைக்கக் கூடிய தண்ணீர் கண்டிப்பாக  குறையும்
அதுமட்டுமின்றி விவசாய நிலங்கள் காய்ந்து கருகி போகும், இதனால் விவசாயி பட்டினி சாவு அதிகரிக்கும்,
தமிழ்நாட்டின் உணவு உற்பத்தி கணிசமாக குறையும்..
ஆந்திர அரசை அணை கட்டுவதை தடுக்குமாறு பல முறை கூறியும் கேட்டகவில்லை என்றும்,
இது குறித்து தமிழக அரசிடம் புகார் செய்தும் நமது அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது என விவசாயிகள் கூறுவது விவசாயிகளின் அவல நிலையை எடுத்துரைக்கிறது..
அரசை நம்புவது மடத்தனம் என்று எண்ணி, தமிழக விவசாயிகளே களத்தில் இறங்கியுள்ளனர்.
அணை கட்டுவதை கண்டித்து ஆந்திராவின் சீதலக்குப்பத்தில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகினற்னர்.
தமிழா நினைவு கொள் தமிழக விவசாயி பிரச்சனை தனிமனித பிரச்சனை அன்று..

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.