இதுவரை பன்னீருக்கு நேசக்கரம் நீட்டிவந்த மத்திய அரசு தற்போது அதனை எடப்பாடி தரப்பிற்கு கொடுக்கத் தொடங்கி விட்டது. தினகரன் தரப்பும் பா.ஜ.கவுடன் தொடர்பில் உள்ளதாகவே கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பன்னீரின் சுற்றுப்பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பிசுபிசுத்து போயுள்ளது.
பன்னீர் அணியினருக்கு கூட்டம் சேர்வதை தடுக்க எடப்பாடி அணி கையாண்ட அனைத்து யுக்திகளும் நல்ல பயனை கொடுத்துள்ளதாம்.
இதனால் ஒவ்வொரு கூட்டமும் பெரும் சோதனைகளுக்கு பிறகே நடைபெற்று வருகிறதாம். மக்களின் ஆதரவு பெருமளவு குறைந்து போய் உள்ளதால் பன்னீரும் சோர்வாகவே காணப்படுகிறார்.
இதன் எதிரொலியாகத்தான் எங்களால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படாது என பன்னீர் தடாலடியாக நேற்று தெரிவித்தார்.
மோடி சார், நமக்கும் ஆதரவு தருகிறார். அவர்களுக்கும் ஆதரவு தருகிறார். இவரை நம்பி இறங்கியது மிகப்பெரிய தப்பாக போய்விட்டது என நெருங்கியவர்களிடம் புலம்புகிறாராம் பன்னீர்.
இதனை அடுத்து சசிகலா குடும்பத்தை விளாசிவந்த முனுசாமியை பேசக் கூடாது என தடை உத்தரவு போட்டுள்ளாராம் பன்னீர்.
இதனால் பன்னீர் கூட்டங்களில் அதிரடிகள் குறைந்து, அண்ணன் ஏன் இப்படி ஆகிவிட்டார் என தொண்டர்கள் கண்ணீர் விடுகின்றனராம்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.