June 1, 2017
துண்டு துண்டாக வெட்டி எறிவேன் என எச்சரித்த மனீஷ்.. கொந்தளிக்கும் சென்னை ஐஐடி மாணவர்கள்!
மாணவர்கள் சூரஜை பிடித்துக் கொள்ள சூரஜை மணீஷ் கண்ணில் தாக்கியதாக சக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 28ம் தேதி இரவு சென்னை கிண்டியிலுள்ள ஐஐடி வளாகத்தில் மாட்டிறைச்சி திருவிழா நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவை நடத்தியதற்காக சூரஜ் என்ற மாணவர் கடுமையாக தாக்கப்பட்டார்,
இது குறித்து சக மாணவர்கள் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்ற்ததில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய சுவாமிநாதன் என்ற மாணவர், அர்ஜூன் என்ற மாணவரை சந்தித்து உன்னைக் கொன்று தூக்கில் தொங்க விடுவேன் என்று மனீஷ் எச்சரித்தார். இதே போன்று நிஷான் என்ற மாணவரையும் துண்டுதுண்டாக வெட்டிப் போட்டுவிடுவேன் இது தான் சரியான பதிலடியாக இருக்கும் என்றும் மனீஷ் மிரட்டியதாக தெரிவித்தார்.
நடவடிக்கையில்லை மனீஷின் இந்த மிரட்டல் குறித்து டீனிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தாலே சூரஜ் மீதான கொலைவெறித் தாக்குதலை தடுத்திருக்கலாம் என்று தெரிவித்தார். ஆதாரம் உள்ளது ஆதாரம் உள்ளது
மற்றொரு மாணவர் சூரஜ் தாக்கப்பட்டது குறித்து கூறும் போது, சூரஜை இரண்டு மாணவர்கள் கைகளை பிடித்துக் கொள்ள மனீஷ் பலமாக கண்ணில் அடித்துத் தாக்கினார். இதற்கான ஆதாரங்கள் ஐஐடி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன என்றார். இதுமட்டுமின்றி சூரஜை மனீஷ் மருத்துவமனையிலும் சென்று மிரட்டியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதற்காக வீடியோ ஆதாரங்களும் மருத்துவமனை சிசிடிவி காட்சியில் உள்ளது என்றார்.
நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை தாக்கப்பட்ட மாணவர் சூரஜை இது வரை கல்லூரி நிர்வாகத்தினர் கண்டு கொள்ளவில்லை என்று மற்றொரு ஐஐடி மாணவர் தெரிவித்தார். மாணவர்கள் பணத்தை கொண்டு தற்போது சூரஜிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சூரஜ்க்கான முழு மருத்துவ செலவையும் ஐஐடி நிர்வாகமே ஏற்க வேண்டும் என்றார்
போராட்டம் தொடரும் சூரஜை தாக்கிய மாணவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் என்றனர். மேலும் சூரஜை தாக்கிய மாணவன் மனீஷ் கைகள் உடைந்ததாக சொல்வது பொய் நாடகம் என்றும் மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
துண்டு துண்டாக வெட்டி எறிவேன் என எச்சரித்த மனீஷ்.. கொந்தளிக்கும் சென்னை ஐஐடி மாணவர்கள்!
Reviewed by மறத்தமிழன்
on
June 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
June 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.