June 21, 2017
தொடரும் பெண்கள் பலாத்காரம்... தூங்கும் காவல்துறை!
உத்தரப்பிரதேசத்தில் 30 வயது பெண் காரில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், எந்தக் கவலையும் இல்லாமல் காவல்துறை வாகனத்திலேயே காவலர்கள் ஓய்வெடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைத்தது. இதையடுத்து அங்கு பசுவதைக்கு தடை, ஆன்டி-ரோமியோ படை என பல சர்ச்சைகள் வெடித்தன. இதனிடையே அண்மைக் காலமாக உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே நேற்று இரவு டெல்லியில் இருந்து 30 வயது பெண் ஒருவர், காரில் கடத்தப்பட்டு 3 ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் நொய்டாவில் உள்ள சாலையில் வீசப்பட்டுள்ளார். இது குறித்து உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பலாத்காரம் நடந்த நொய்டாவில் காவல்துறை அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. காவல்துறை வாகனத்தில் அவர்கள் கவலையில்லாமல் ஓய்வெடுக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் காவல்துறையும், அரசாங்கமும் வெகு காலமாக தூங்கிக் கொண்டிருக்கிறது என நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர். கடந்த மே மாதம், ஹரியானா மாநிலம் குருகரம்மில் பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் அவரது குழந்தையும் கொல்லப்பட்டது. இதையடுத்து குழந்தையுடன் அவர் சாலையில் வீசியெறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
#WATCH: Few hours after a woman was gang raped in Greater Noida, policemen were caught taking nap in a PCR van near the spot. pic.twitter.com/dZHCHLB7gn
- ANI UP (@ANINewsUP) June 20, 2017
தொடரும் பெண்கள் பலாத்காரம்... தூங்கும் காவல்துறை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 21, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.