June 20, 2017
மாட்டிறைச்சி விவகாரம்: முதல்வர் அளித்த பதிலும் தி.மு.க ரியாக்ஷனும்!
இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு செயல்படும். தமிழகத்தில் பசுவதை தடுப்புச் சட்டம் 40 ஆண்டுக்காலமாகவே நடைமுறையில் உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர்தான் தமிழக அரசு முடிவெடுக்கும்' என்று பதிலளித்தார்.
முதல்வர் அளித்த பதிலில் திருப்தி இல்லை என கூறி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. சட்டப்பேரவைக்கு வெளியே பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், 'மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் முதலமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை. தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிப்பணிந்து செயல்படுகிறது' என்று குற்றம்சாட்டினார்.
மாட்டிறைச்சி விவகாரம்: முதல்வர் அளித்த பதிலும் தி.மு.க ரியாக்ஷனும்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 20, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.