ஆளுங்கட்சியையே எதிர்த்த தில்லான போலீஸ்…
டி.எஸ்.பி. கார்த்திகேயனை கடுமையாக கண்டிக்கிறது சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க..!!
பல இன்னல்களுக்கு பிறகு , டி.டி.வி.தினகரன் சொந்த ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
அவரது வருகையை முன்னிட்டு மகிழ்ச்சி தெரிவித்து திருப்பத்தூரின் மாஜி எம்.எல்.ஏ. உமாதேவன் தலைமையில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
அப்போது அங்கே வந்த, டி.எஸ்.பி. கார்த்திகேயன்,
“ஜெயிளுக்கு போனவனுக்கெல்லாம் எதுக்கு டா, வெடி போடறிங்க ” என்று கேட்டுள்ளாராம்.
மேலும் கலைந்து போக விட்டால் சுட்டுவிடுவேன் என்றும் உமாதேவனை தரகுறைவாக பேசியுள்ளார்,
இதற்கு சிவகங்கை மாவட்ட அ.தி.மு.கவினர் கூறியது,
இருங்க சார், அண்ணன் தினகரன் சீக்கிரம் முதல்வர் ஆவாரு. அப்புறம் நீங்க தண்ணியில்லாத காடு தான் என்று கூறியுள்ளனர்.
அதற்கு அவரோ
’தமிழ்நாடு இப்போ இருக்கிற நிலைமைக்கு எல்லாமே தண்ணி இல்லாத வரக்காடு தான்…
உங்க அண்ண வரப்போ மாத்திக்கலாம்.. இப்போ இடத்தே காலி பண்ணு சொல்லிட்டாராம்.
பொது இடத்தில் அவர் இப்படி மொக்கை செய்ததால் காண்டான அ.தி.மு.கவினர்,செலவே இல்லாமல் வாட்ஸப்பில் இந்த கண்டன போஸ்டரை பரப்பி உள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.