Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2017

மது விருந்தில் நண்பர்களுடன் வரம்பு மீறிய வருங்கால மனைவி: அதிரடி முடிவை எடுத்த காதலர்


அமெரிக்காவில் வருங்கால மனைவி தனது நண்பர்களுடன் பேச்சுலர் பார்ட்டியில் மது அருந்தி விட்டு நடந்து கொண்ட விதத்தால் வருங்கால கணவர், நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் ஒரு ஆணும், பெண்ணும் காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது.
திருமணத்திற்கு முன் மணப்பெண் தனது நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி அளித்துள்ளார்
அந்த பார்ட்டி ஒரு கட்டத்தில் எல்லை மீறி போக மது போதையில் மணப்பெண் நண்பர்களுடன் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார்.
அப்போது பெண்ணின் நண்பர் ஒருவர், அரைகுறை ஆடையுடன் நடனமாடும் ஸ்ட்ரிப்பரை அழைத்து கொண்டு அங்கு வந்துள்ளார்.
பின்னர் திருமணம் நடக்கவிருந்த பெண் போதையின் உச்சத்தில் இருந்த போது அவருடைய நண்பர்கள், ஸ்ட்ரிப்பர் அழைத்து வந்து அவரது ஆடைகளை ஸ்ட்ரிபிங் செய்துள்ளனர்.
இதையெல்லாம் அங்கிருந்த Carmelo Delva என்ற நபர் வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு மணமகன் திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் பேஸ்புக் பதிவில் Carmelo குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை இதுவரை 17 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளார்கள். பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொள்ள இருந்தவர்களை இந்த மிதமிஞ்சிய நாகரீகம் பிரித்து விட்டது என கூறினால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.