June 27, 2017
விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு ; ஜெ. மர்ம மரண வழக்கை போலீஸ் விசாரிக்குமா ?
ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் எனவும் கடந்த மே 22 ஆம் தேதி செல்வ விநாயகம் என்ற வழக்கறிஞர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் முறையிட்டார். அதில், அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தப் புகாரை காவல் துறையினர் ஏற்காததை அடுத்து அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார். அவர் தனது மனுவில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்திற்கு விடைகாணும் வகையில் விரிவான விசாரணை நடத்தக்கோரி, தான் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
எனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 186 பேரிடம் விசாரிக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு ; ஜெ. மர்ம மரண வழக்கை போலீஸ் விசாரிக்குமா ?
Reviewed by Admin
on
June 27, 2017
Rating: 5
Reviewed by Admin
on
June 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.