Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 19, 2017

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு... சாமளாபுரத்தில் மீண்டும் போராட்டம்!


டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூர் சாமளாபுரத்தில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தொகுதி எம்எல்ஏ., கனகராஜை, மக்கள் வளைத்துப் பிடித்தனர்.

இதையடுத்து, எம்எல்ஏ-வை பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு, மக்கள் மீது வன்முறை வெறியாட்டம் ஆடியது காவல்துறை. குறிப்பாக, ஈஸ்வரி என்ற பெண்ணை ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் கன்னத்திலேயே அறைந்த வீடியோ பதிவு... ஊடகங்கள், சமூக வலைதளங்கள் என அனைத்திலும் பரவி நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
இந்த சம்பவத்தைப் பற்றி மனித உரிமை ஆணையமும் பேசியது. தடியடி குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவும் அளித்ததோடு, அதிகாரி பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியிருந்தது உயர்நீதி நீதிமன்றம். சாமளாபுரம் தாக்குதல் நடைபெற்ற அடுத்த சில நாள்களின் காட்சிகள் இப்படி இருக்க, பல மாதங்கள் கழித்து இப்போது சாமளாபுரத்தில் அரங்கேறி வரும் காட்சிகள் அனைத்தும் வேறு மாதிரி இருக்கிறது. சாமளாபுரம் பேரூராட்சியில் டாஸ்மாக் கடையே அமைக்கமாட்டோம் என்று உத்தரவாதம் அளித்துச் சென்ற அதிகாரிகள், இன்று பேரூராட்சியில் காளி பாளையம் என்ற பகுதியில் டாஸ்மாக் கடையை திறந்துவிட்டார்கள்.



இந்த சம்பவத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாண்டியராஜனுக்கு அண்மையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த காட்சிகளை எல்லாம் பார்த்து கொதித்துப்போன சாமளாபுரம் மக்கள் இன்று மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கிவிட்டார்கள்.
சாமளாபுரம் பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடையைத் திறந்த அதிகாரிகளை கண்டித்தும், அதிகாரி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், போராடிய மக்கள் மீது போடப்பட்ட பொய்வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யக் கோரியும், சாமளாபுரத்தில் மக்கள் உண்ணாவிரதத்தை துவங்கிவிட்டார்கள்.
"அரசும், அதிகாரிகளும் தொடர்ந்து எங்களை ஏமாற்றி வருகிறது. பெயரளவுக்கு வந்து கோரிக்கைகளை கேட்கிறார்கள், கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று கூறிவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். போக்குவரத்து உட்பட யாரையும் பாதிக்காத வகையில் சாலையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறோம். உச்சி வெயில் கொளுத்தும் நேரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களையும், குழந்தைகளையும் வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டி சாமையானா பந்தலைப் போட போராட்டகுழு சார்பாக ஏற்பாடு செய்தோம். காவல்துறை வந்து பந்தல் போடவிடாமல் அதையும் தடுத்தார்கள். வெயிலில் மடிந்து செத்தாலும் பரவாயில்லை. எங்களின் கோரிக்கை எப்போது நிறைவேற்றப்படுமோ அன்றுதான் எங்கள் போராட்டம் நிறைவடையும்" என்கிறார்கள் சாமளாபுரம் மக்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.